/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா..
/
நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா..
ADDED : செப் 14, 2025 03:37 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் கல்வி இயல் கல்லூரியில் நல்லாசிரியர் விருது பெற்று ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற வீர சோழன் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம், வெள்ளையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் வேல்முருகன் ஆகியோருக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
செயலாளர் சங்கர நாராயணன், அறிவியல் கல்லூரி செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். விருது பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. போக்குவரத்துச் செயலர் விக்னேஷ், துணைச் செயலாளர் அருண், பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியை சாந்தகுமாரி நன்றி கூறினார்.