
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்ற சிவகாசியை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கல்லுாரி செயலர் செல்வராஜன் தலைமை வகித்து பாராட்டினார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்ற தாயில்பட்டி கோகுலக்கண்ணன், பூவநாதபுரம் கோகுல், திருத்தங்கல் அப்சரா, சிவகாசி ரீட்டா மஹியா ஆகியோர் பேசினர். கல்லுாரி துணை முதல்வர் முத்துலட்சுமி நன்றி கூறினார். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.