ADDED : ஜூன் 26, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சிவகாசி வடிவேல் பைரோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 , பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வடிவேல் பைரோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொழிற்சாலையின் உரிமையாளர் ஆறுமுகசாமி வடிவேல் பாராட்டி பரிசு, ஊக்கத் தொகையும் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட மாணவர்களை கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொழிலாளர்களின் குடும்பத்தினர் பெற்றோர் கலந்து கொண்டனர். மேலாளர் தங்கதுரை நன்றி கூறினார்.