ADDED : ஆக 20, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஆக 21-
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் விருதுநகர் வருவாய் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள், சிவகாசி காளிஸ்வரி கல்லூரியில் நடந்தது.
இதில் ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றத்தில் 14 வயதுக்குட்பட்டோருக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் மாணவர்கள் டான்ரோகித், நிதிஷ்குமார் முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சிவகுமாரன், முதல்வர் சரவணராஜன், நிர்வாக அலுவலர் சந்தானம், ஆசிரியர்கள் ஜெயக்குமார், சந்தான லட்சுமி பாராட்டினர்.
