தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கலை அறிவியல் கண்காட்சி/dc

கலை அறிவியல் கண்காட்சி/dc

கலை அறிவியல் கண்காட்சி/dc


ADDED : ஆக 20, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி, ஆக. 21 -

சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கான கலை ,அறிவியல் கண்காட்சி நிலையான வளர்ச்சிக்கான புத்தாக்கம் என்ற தலைப்பில் இரு நாட்கள் நடந்தது.

கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா வழி நடத்தினர். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் மகேஸ்வரன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சுதா பெரிய தாய், ராஜராஜன் குத்துவிளக்கு ஏற்றினர். கல்லுாரியின் கலை ,அறிவியல் துறை மாணவிகள், புதுமை தரும் நாளைய உலகம், நிலைபேறான வணிக நடைமுறைகள், சத்தான உணவு நிலையான எதிர்காலம் குறித்து காட்சிப்படுத்தினர். சிவகாசி சுற்றியுள்ள 27 பள்ளிகளில் இருந்து 3280 மாணவர்கள், 158 ஆசிரியர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்ககம் மாநில துணைத்தலைவர் சுந்தரராமன், மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம், மாவட்ட செயலாளர் குருவையா , ராஜபாளையம் பேகான் நிறுவன இயக்குனர் செந்தில்முருகன், ஆமத்துார் அரசு பள்ளி ஆசிரியர் ஆஷாதேவி, ஆடிட்டர் சித்ரா கலந்து கொண்டனர். கல்லுாரி பேராசிரியர்கள் ரம்யா, ஷன் மிஸ்டா, சுபா ரஞ்சனி, மெர்லின் ராணி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us