/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரங்காராவ் லயன்ஸ் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
/
ரங்காராவ் லயன்ஸ் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : டிச 03, 2024 05:11 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 64 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் சூளை விநாயகா பள்ளியில், உலக சாதனைக்காக நடந்த அதிக நேரம் சூரிய நமஸ்காரம் செய்யும் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் 21 மாணவிகள் நோபல் வேர்ல்ட் ரெக்கார்டிலும், 44 மாணவிகள் மாநில அளவிலும், 16 மாணவிகள் முதலிடம் 10 மாணவிகள் இரண்டாமிடம் 18 பேர் மூன்றாமிடம் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடத்தை பள்ளி பெற்றது.
சாதனை மாணவிகளை பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள், தாளாளர் விஜயகுமார், செயலாளர் பால்சாமி, அரிமா சங்க உறுப்பினர்கள், முதல்வர் ராஜேஸ்வரி, ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.