ADDED : ஏப் 29, 2025 04:56 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை அமைத்த நுாறு வணிகர்களுக்கும், அவர்களின் தமிழ் பயன்பாட்டை ஊக்குக்கும் வகையில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அவர்களுக்கு 'பைந்தமிழ் பற்றாளர்கள்' என பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது.
கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் முதன்மையாகவும், பிரதானமாகவும் அமைக்க வேண்டும். பிற மொழிகளிலும் எழுத வேண்டும் எனில் தமிழ் மொழிக்கு கீழ் ஆங்கிலத்தில் 2வது இடத்திலும், இதர மொழிகளுக்கு 3வது இடத்திலும் எழுத வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
மே 15க்கு பின் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா, தொழிலாளர் உதவி ஆணையர் மை விழிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

