நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: மாநில அளவிலான பூப்பந்து போட்டிகளில் அன்னப்ப ராஜா பள்ளி மாணவர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டு விழா நடந்தது.
விருதுநகர் வருவாய் மாவட்ட அளவில் பூப்பந்து போட்டிகள் அன்னப்பராஜா நினைவு பள்ளியில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட 3 பிரிவுகளிலும் நடந்தன. இதில் மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்று மாநில அளவு போட்டிகளுக்கு மாணவியர் குழு கலந்து கொள்கின்றது. தேர்வு பெற்ற மாணவியர்களை பள்ளிச் செயலாளர் சுதர்சன் ராஜூ பாராட்டினார். உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

