நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைச்சங்கம ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். மாணவி சுவாதிகா வரவேற்றார். முதல்வர் சுந்தரமகாலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். லயன்ஸ் சங்க ஆளுநர் பிரான்சிஸ் ரவி, லயன்ஸ் சங்க முதல் பெண்மணி பிரமிளா ரவி பங்கேற்று பேசினர்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கல்வி ஆண்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் வள்ளலார் அறக்கட்டளைக்கு உணவு நிதி வழங்கப்பட்டது.
விழாவில் லயன் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.