/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குளு குளு சூழலில் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் மரங்கள் வளர்ப்பில் அக்கறை, ஊக்குவிப்பு
/
குளு குளு சூழலில் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் மரங்கள் வளர்ப்பில் அக்கறை, ஊக்குவிப்பு
குளு குளு சூழலில் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் மரங்கள் வளர்ப்பில் அக்கறை, ஊக்குவிப்பு
குளு குளு சூழலில் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் மரங்கள் வளர்ப்பில் அக்கறை, ஊக்குவிப்பு
ADDED : அக் 14, 2024 09:05 AM

இன்றைய சூழலில் மரம் வளர்ப்பது ஒருவருக்கு உயிர் கொடுப்பது போன்றது. மழைக்காலம் துவங்குகிற நிலையில் நாம் மரங்களை நடுவதற்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் ஏற்ற நேரம் இது. காடுகள் நிலத்தின் நுரையீரல் போன்றது. இங்குள்ள மரங்கள் தேவையற்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உறிஞ்சி மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. அதிக காடுகள் இருந்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்க உதவும். மனிதர்கள் பசுமையோடு இணைந்து இருக்கிற போது இயற்கையோடு இருப்பதாக உணர்கின்றனர்.
இத்தகைய இயற்கை அளித்த நன்கொடையை மனிதர்கள் ஈவு இரக்கமின்றி தங்கள் வசதிக்காக சுயநலத்திற்காக வெட்டி சாய்கின்றனர். இன்றைக்கு பெரும்பாலான காடுகள் அழிந்தும் அழியும் நிலையில் உள்ளன. மனிதர்கள் இவற்றை பாதுகாப்பதன் அவசியத்தை உணராமல் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து கொண்டு இருக்கின்றனர்.
மரங்களை வளர்க்க பாதுகாக்க பல்வேறு தன்னார்வர்கள், சமூக அமைப்புகள், அரசு உட்பட, இப்போதுதான் விழித்துக் கொண்டு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வீட்டுக்கு ஒருவர் மரங்களை கட்டாயம் வளர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அருப்புக்கோட்டை நகராட்சி மரங்கள் வளர்ப்பதில் அக்கறை கொண்டும், மரங்கள் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமாக மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் பல ஆண்டுகளாக வாகை, கொன்றை, வேப்ப மரம், அரசு, தென்னை உட்பட பல்வேறு வகையான மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நகராட்சி உள்ளே நுழையும் இடத்திலிருந்து வளாகம் முழுவதும் வரிசையாக மரங்கள் நடப்பட்டு குளு குளு சூழலில் உள்ளது. மரங்கள் அடர்ந்த பகுதியில் அலுவலகத்திற்கு வரும் மக்கள் முழுமையான உட்கார ஆங்காங்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் முன்புறம் சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நகராட்சி அலுவலகம் வளாகம் முழுவதும் மரங்கள் வளர்க்கப்பட்டு குளு குளு சூழலில் உள்ளது. நகராட்சியின் முன்புறம் சிறிய பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வார்டு இருக்கும் சென்று வார்டு வளர்ச்சிப் பணிகளை குறித்து கேட்பது மட்டுமல்லாமல் மரங்கள் வளர்ப்பின் அவசியத்தை ஊக்குவிக்கிறோம். பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. நகராட்சி குப்பை கிடங்கில் மரங்களை வளர்த்து வருகிறோம்.
- சுந்தரலட்சுமி, நகராட்சி தலைவர்.
மரங்கள் வளர்ப்பின் கட்டாயத்தை பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். நகராட்சி பூங்காக்களை பராமரிப்பு பணி செய்து மரங்களை வளர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மரங்கள் வளர்ப்பில் முன் உதாரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நகராட்சி முழுவதும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்த்து குளு குளு சூழலை ஏற்படுத்தி இருக்கிறோம். இதேபோன்று நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மரங்கள் வளர்க்கப்படும்.
- பழனிச்சாமி, துணை தலைவர்.