/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடப்பில் அருப்புக்கோட்டை நகராட்சி மயான கட்டட பணி
/
கிடப்பில் அருப்புக்கோட்டை நகராட்சி மயான கட்டட பணி
ADDED : மே 19, 2025 05:28 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் கட்டப்பட்டு வரும் மயானம் அரைகுறை பணி செய்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பெரிய புளியம்பட்டி, திருநகரம், புறநகர் பகுதியினர் இறந்தவர்களை 3 கி.மீ., தள்ளி உள்ள நகராட்சி மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டி இருந்தது. இதற்காக நகராட்சி மூலம் ரூ.ஒரு கோடி நிதியில் அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோடு எல்லை பகுதியில் 3 கி.மீ., துாரத்தில் நகராட்சி இடத்தில் மயானம் கட்டும் பணி நடந்தது.
பணி நடந்து கட்டட வேலை முடிந்து, பிற பணிகள் செய்யாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மயானம் உள்ள பகுதி பள்ளமாக இருப்பதால் கன மழை பெய்தால் கட்டடம் பாதியளவு வெள்ளம் சூழ்ந்து விடும். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் கட்டடத்தின் பாதி அளவு வெள்ளம் சூழ்ந்த நிலையில் இருந்தது. வெள்ளம் வடிந்த பின்பு தான் பணிகளை செய்தனர். நகராட்சியினர் கிடப்பில் போட்ட மயான பணிகளை விரைவில் முடிக்கவும் மழைநீர் தேங்காத வகையில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.