/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடப்பில் போடப்பட்ட அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள்
/
கிடப்பில் போடப்பட்ட அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள்
கிடப்பில் போடப்பட்ட அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள்
கிடப்பில் போடப்பட்ட அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள்
ADDED : ஜன 26, 2025 04:46 AM

அருப்புக்கோட்டை : கிடப்பில் போடப்பட்ட அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் அசுர வேகத்தில் நடக்கும் என கமிஷனர் ராஜமாணிக்கம் தெரிவித்தார். அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள நகராட்சி பஸ் ஸ்டாண்ட் கட்டி 30ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அதை இடித்துவிட்டு புதியதாக கட்ட முடிவு செய்யப்பட்டு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2023 மே மாதம் பணிகளை துவங்கப்பட்டது.
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. ஒரு ஆண்டுக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்து விடும் நகராட்சி நிர்வாகம் கூறி வந்த நிலையில், பணிகள் மந்தகதியில் நடப்பதால் 50 சதவிகித பணிகள் தான் முடிந்துள்ளது.
நடந்து முடிந்த நகராட்சி கூட்டத்தில் 2025 மார்ச்சில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என நகராட்சி பொறியாளர் கவுன்சிலர்களிடம் உறுதியளித்தார். இந்நிலையில் பல நாட்களாக புதிய பஸ் ஸ்டாண்டில் பணிகள் எதுவும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இங்கு குடிமகன்களின் பாராக செயல்படுகிறது. பணிகள் முழுவதும் முடிவடைய குறைந்தது 5 மாதங்களுக்கு மேல் ஆகும்.
ஏற்கனவே உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மழைக்காலமானால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் என்றைக்கு பயன்பாட்டிற்கு வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் : புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரரை அழைத்து பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பணிகள் நடந்து பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறி சமாளித்தார்.