/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை: மந்தகதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள்; எப்போது வரும் பயன்பாட்டிற்கு

ADDED : அக் 02, 2025 11:16 PM

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், பயன்பாட்டிற்கு வருவது எப்போது என, அதிகாரிகளுக்கே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி 30 ஆண்டுகள் ஆன நிலையில், சேதமடைந்து போனதால் இடித்து விட்டு புதியதாக கட்டும் பணி 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
ஒரு ஆண்டில் கட்டி திறக்கப்படும் என அதிகாரிகள் கூறிய நிலையில், மந்த கதியில் பணிகள் நடந்து வருவதால் ஆண்டுகள் கடந்தும் பணிகள் நடந்து கொண்டே உள்ளது.
ஏற்கனவே பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருந்த கடைகாரர்களுக்கு, தற்காலிக பஸ் ஸ்டாண்டில் கடைகள் வைக்க ஏற்பாடு செய்தாலும் வியாபாரம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மக்களும் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் எந்தவித வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
அமைச்சரும், கலெக்டரும் ஆய்வு செய்து விட்டு சென்றதோடு சரி. இருப்பினும் பணிகள் ஆமை வேகத்தில் தான் நடக்கின்றன.
இதே நிலையில் பணிகள் நடந்தால், சட்டசபை தேர்தல் முடிந்த பின்பு தான் பஸ் ஸ்டாண்ட் திறப்பர் க்கப்பர்கள் போல என மக்கள் முனுமுணுக்கின்றனர்.