/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.4.30 லட்சத்தில் வாறுகால்; வெளியேறாமல் தேங்கும் கழிவுநீர்
/
ரூ.4.30 லட்சத்தில் வாறுகால்; வெளியேறாமல் தேங்கும் கழிவுநீர்
ரூ.4.30 லட்சத்தில் வாறுகால்; வெளியேறாமல் தேங்கும் கழிவுநீர்
ரூ.4.30 லட்சத்தில் வாறுகால்; வெளியேறாமல் தேங்கும் கழிவுநீர்
ADDED : அக் 02, 2025 11:15 PM

அருப்புக்கோட்டை; அருப்புகோட்டை அருகே புளியம்பட்டி நெசவாளர் காலனி பகுதியில் கட்டப்பட்ட பிரதான வாறுகால் முறையாக கழிவு நீர் வெளியேறாததால் லட்சக்கணக்கில் நிதி செலவழித்தும் வீணானது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலையம்பட்டி ஊராட்சியில், 15 வது நிதி குழு மானியத்தில், புளியம்பட்டி நெசவாளர் காலனி மெயின் ரோட்டில் இருந்து தீர்த்தக்கரை ஓடை வரை 4.30 லட்சம் ரூபாயில் புதிய வாறுகால் கட்டப்பட்டது.
இதன் இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டியது தான் மிச்சம். சீராக கழிவு நீர் வெளியேறாமல் ஆங்காங்கு தேங்கியுள்ளது. வாறுகாலில் குடிநீர் குழாய் செல்கிறது.
இதை ஒதுக்கி போடாமல், அதன் மேலேயே கழிவுநீர் ஓடுகிறது. இதனால் கழிவுநீர் குடிநீர் குழாய் வழியாக செல்ல வாய்ப்பு உள்ளது.
ஊராட்சி நிர்வாகம் கடமைக்கு தான் நிதியை செலவழிக்கிறது. இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொள்வது இல்லை. வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.