/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
/
டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
ADDED : அக் 22, 2024 04:25 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் பஸ்ஸில் பயணிகளுக்கு இடையூறு செய்தவரை கண்டித்த கண்டக்டர் ரஞ்சித் குமார் 28, டிரைவர் கோவிந்தராஜ் 26 ,தாக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் காலை கூமாபட்டியில் இருந்து மதுரைக்கு சென்ற தனியார் பஸ்ஸில் மகாராஜபுரத்தில் பெரிய கருப்பன் என்பவர் ஏறி, படியில் நின்று கொண்டும், பின்னர் பஸ்சிற்குள் பெண்களுக்கு இடையூறு செய்ததையும் கண்டக்டர் ரஞ்சித் குமார் கண்டித்துள்ளார்.
இரவு பஸ் வத்திராயிருப்பு வரும்போது கோட்டையூர் கல்குவாரி அருகே பஸ்சைமறித்த முத்துக்குமார், பெரிய கருப்பன், சிவா உட்பட சிலர் பஸ்சிற்குள் ஏறி கண்டக்டர், டிரைவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதில் இருவரும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். வத்திராயிருப்பு போலீசார் தேடி வருகின்றனர்.