நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளை சார்பில் மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு வேட்டி, சேலை, பழங்கள் வழங்கப்பட்டன. சேக்கிழார் மன்ற சிவராத்திரி கூட்டு வழிபாடு சொக்கர் கோயிலில் நடந்தது. தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
வழிபாட்டில் உலக நன்மை வேண்டியும் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் விரைவில் நலம் பெறவும் சிவபுராணம் உள்ளிட்ட பதிவுகள் பாராயணம் செய்யப்பட்டன. சுவாமிக்கு துாப தீப ஆராதனைகள் செய்து அறக்கட்டளை பொறுப்பாளர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளிகளுக்கு பிரசாதம், வேட்டி, சேலை, பழங்கள் வழங்கினர். ஏற்பாடுகளை மன்ற கவுரவ தலைவர் முத்துகிருஷ்ணன், செயலர் கணேசன், பொருளாளர் முத்தையா தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர்.

