நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் இந்திய குழந்தைகள் சங்கத்தின் திறப்பு விழா மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் ஜவஹர் வரவேற்றார். செயலாளர் வெங்கடசுப்பிரமணியன், பொருளாளர் சண்முகமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் பேசியதாவது: இந்த சங்க கிளை மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் முதுநிலை மருத்துவம் படிப்பவர்களுக்கும், குழந்தைகள் மருத்துவர்களுக்கும் புதிய நோய்கள், மருந்துகள், தடுப்பூசி குறித்து அறிவதற்கும் உதவியாக இருக்கும், என்றார்.
முன்னாள் மாநில தலைவர்கள் வெங்கடேஸ்வரன், பாலசங்கர் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் ராஜ்குமார் காய்ச்சல் குறித்தும், டாக்டர் பாலசங்கர் நாய்க்கடி குறித்து பேசினார்கள். வெங்கடசுப்பிரமணியன் நன்றி கூறினார்.