/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிரைவர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு
/
டிரைவர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு
ADDED : மே 25, 2025 06:50 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார், 34, இவர் சரக்கு வாகன டிரைவராக உள்ளார். வாகனத்தில் பொருட்களை ஏற்றி அருப்புக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு டெலிவரி செய்து வந்தார்.
நேற்று முன்தினம் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா செம்பட்டியில் நடந்தது. இவரது சிலைக்கு அவ்வூரை சேர்ந்த இளைஞர்கள் மாலை அணிவிக்க ஊர்வலமாக வந்தனர். பின்னால் வாகனத்தில் வந்த அசோக்குமார் ஹாரன் அடித்துள்ளார். இதில் சில இளைஞர்கள் அவரை தாக்கி வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
காயமடைந்த அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் 4 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.