/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.எஸ்.ஐ., மீது தாக்கு: கைது 4
/
எஸ்.எஸ்.ஐ., மீது தாக்கு: கைது 4
ADDED : டிச 10, 2024 07:05 AM

விருதுநகர் : விருதுநகரில் தகாத வார்த்தைகளால் பேசியதை தட்டி கேட்ட எஸ்.எஸ்.ஐ., மாரிமுத்துவை 51, கீழே தள்ளி காயப்படுத்திய நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., மாரிமுத்து பழைய பஸ் ஸ்டாண்ட் முனியாண்டி கோயில் வழியாக நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டார். கலைஞர் நகரைச் சேர்ந்த தனுஷ்குமார் 25, அய்யனார் நகரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா 27, கனக முனிஸ்வரன் 24, விமலேஷ் குமார் 24, ஆகியோர் போதையில் அவ்வழியாக சென்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர்.
தட்டிகேட்ட எஸ்.எஸ்.ஐ., மாரிமுத்துவை தள்ளி விட்டதில் அவர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனுஷ்குமார், கார்த்திக் ராஜா, கனக முனிஸ்வரன், விமலேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

