/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் துறையினர் மீதான தனிநபர்கள் தாக்குதலை அனுமதிக்க முடியாது; மனித உரிமை ஆணைய குழு உறுப்பினர் பேட்டி

ADDED : டிச 05, 2024 11:43 PM

ஸ்ரீவில்லிபுத்துார்: ''போலீஸ் துறையினரும் மனிதர்கள் தான். அவர்கள் மீதான தனிநபர்கள் தாக்குதலை அனுமதிக்க முடியாது,'' என, விருதுநகரில் மாநில மனித உரிமை ஆணைய குழு உறுப்பினர் கண்ணதாசன் கூறினார்.
விருதுநகர் மாவட்ட கிளை சிறையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று காலை ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் குழந்தைகள் காப்பகம், சிறைகளை மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. தமிழக சிறைகளில் சிறப்பான முறையில் உணவு வழங்கப்படுவதை காண்கிறோம். இதற்கு தமிழக அரசிற்கும், சிறைத்துறைக்கும் பாராட்டுக்கள். ஜாமின் பெற்றும் வெளியில் வர முடியாமல் இருப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்து உதவ சிறைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக மனித உரிமை ஆணையம் என்பது அரசு ஊழியர்கள் செய்யக்கூடிய தவறுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தனிநபர்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டதை அறிந்து போலீஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டோம். காவல்துறையினர் மீதான வன்முறையை அனுமதிக்க முடியாது. அவர்களும் மனிதர்கள் தான். எனவே தாக்கியவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினோம். அதன்படி போலீஸ் துறையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எல்லோருக்கும் பாதுகாப்பு தருவதும், மனிதர்கள் மனிதராக பாவிப்பது தான் மனித உரிமை ஆணையத்தின் அடிப்படை. சட்டப்படியே அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது என்றார்.