/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி: கைது 2
/
போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி: கைது 2
போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி: கைது 2
போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி: கைது 2
ADDED : ஜன 06, 2025 03:25 AM
ராஜபாளையம்,: தவணை தொகை செலுத்தாததால் நிதி நிறுவனத்தினர் எடுத்துச்சென்ற வாகனத்தை மீட்டுத் தரக்கோரி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர், அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் வீரகாளை 33. தனியார் நிதி நிறுவனத்திடம் தவணை முறைக்கு 'டாடா ஏஸ்' வாகனம் வாங்கினார். ஆனால் நான்கு மாதம் தவணை தொகை செலுத்தாததால் நிறுவனத்தினர் வாகனத்தை எடுத்துச் சென்று விட்டனர்.
இதையடுத்து இவர், நண்பர் முத்துராஜூடன் 30, சேர்ந்து தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வந்து வழக்குப் பதிந்து வாகனத்தை மீட்டுத் தர வேண்டும் என தகாத வார்த்தைகளால் சத்தமிட்டதுடன் வீரகாளை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்தபடி தான் வைத்திருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த டீசலை தலையில் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.
போலீசார் தடுத்து தண்ணீர் ஊற்றியதுடன் சம்பவத்தில் ஈடுபட்டதாக வீரகாளை, நண்பர் முத்துராஜ் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

