/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மிளகாய் பொடி துாவிதங்க நகை திருட முயற்சி
/
மிளகாய் பொடி துாவிதங்க நகை திருட முயற்சி
ADDED : அக் 19, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் டி.சி.கே., பெரியசாமி தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம் 56. இவர் காசுக்கடை பஜாரில் தங்க நகைகள் செய்து கொடுக்கும் பட்டறை வைத்துள்ளார். இவரின் பட்டறைக்கு நேற்று காலை வந்த முத்தால் நகரைச் சேர்ந்த பட்டுராஜா தங்கத்தில் மோதிரம் வேண்டும் என கேட்டார்.
நகைகள் வாங்க வேறு கடைக்கு செல்லுமாறு கூறிய மகாலிங்கத்தின் முகத்தில் மிளகாய் பொடியை துாவி கையில் இருந்த தங்க நகையை திருட முயன்று அலைபேசியை மட்டும் திருடிச்சென்றார். மேற்கு போலீசார் பட்டுராஜாவை கைது செய்தனர்.