/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி
/
கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி
ADDED : ஜன 30, 2024 07:15 AM
சாத்துார் : ஆலங்குளம் அருகே டி.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைத்து பணம் நகையை கொள்ளையடிக்க முயன்றனர். எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.
ஆலங்குளம் அடுத்த காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் கெங்கேஸ்வரி, 52. டி .கரிசல்குளம் தொடக்க வேளாண்மையை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக உள்ளார். ஜன.24ல் கூட்டுறவு சங்க கதவை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். கூட்டுறவு சங்கத்தின் லாக்கருடன் இவரது அலைபேசி இணைக்கப்பட்டு இருந்ததால் மர்மநபர்கள் இரும்பு லாக்கரின் பூட்டை உடைத்த போது இவரது அலைபேசிக்கு எச்சரிக்கை அலாரம் வந்துள்ளது.
அதே நேரத்தில் சங்கத்தில் உள்ள எச்சரிக்கை அலாரம் மணியும் ஒலித்ததால் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முடியாமல் அலாரம் சத்தம் கேட்டவுடன் தப்பி சென்றனர்.
இதனால் பல லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருட்டு போகாமல் தப்பியது. கூட்டுறவு சங்கத்தில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகள் மூலம் ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.