/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிகிச்சை பெறுவோரிடம் திருட முயற்சி
/
சிகிச்சை பெறுவோரிடம் திருட முயற்சி
ADDED : அக் 14, 2024 04:08 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் திருட முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இங்குள்ள பெண்கள் வார்டில் நேற்று அதிகாலை 5:20 மணிக்கு ஒரு நபர் நுழைந்து அங்குமிங்குமாக நடந்துள்ளார். அப்போது சிகிச்சை இருந்தவர்கள் கண்விழித்த நிலையில் அந்த நபர் அங்கிருந்து வெளியேறி சென்று விட்டார். வந்தவன் திருடனாக இருப்பானோ என சிகிச்சையில் இருந்தவர்கள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.