ADDED : நவ 15, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: வீட்டு வசதி வாரியத்தின், மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட சிவகாசி சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்து வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. ஆபத்தான இந்த குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்த தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இப்பணிக்கு அரசு துறை கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திய அனுபவம் வாய்ந்தவர்கள் நவ. 6 முதல் https://tntenders.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஏல விபரங்களை பார்த்து ஏலத்தில் பங்கேற்கலாம், என மதுரை வீட்டு வசதி பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

