ADDED : நவ 15, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடந்தது.
நடப்பு நிதி ஆண்டிற்கு கல்விக்கடன் இலக்காக ரூபாய் 38.11 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் செப். வரை 576 மாணவர்களுக்கு ரூ.27.61 கோடி கல்விக் கடனை வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த முகாமின் மூலம் 152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி கல்விக்கடன் ஆணைகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச்செல்வன், மாவட்ட பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

