நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் பென்னிங்டன் நூலகத்தில் நடந்தது.
தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்துசாமியை பாராட்டி சிவனைந்த பெருமாள், கவிஞர் சுரா, முனைவர் சிவனேசன், பேராசிரியர் காளியப்பன் பேசினர்.
எழுத்தாளர் முத்துசாமி ஏற்புரையாற்றினார். எழுத்தாளர்கள் கந்தசாமி, மோகன் இசை பாடல்கள் பாடினர். தமிழ் பித்தன், அங்குராசு, சந்திரசேகர், ராஜகோபால் பங்கேற்றனர்.