ADDED : நவ 26, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: வத்திராயிருப்பு தாலுகா குன்னூர் காலனியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் 46, ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று முன்தினம் இரவில், நான்கு வழிச்சாலையில் இருந்து குன்னுார் ரோட்டில் ஆட்டோவை ஓட்டி செல்லும்போது வளைவில் திரும்பாமல் கம்பி வேலியில் மோதி கீழே விழுந்ததில் பலியானார். கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
