/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஆட்டோ டிரைவர் பரிதாப பலி
/
பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஆட்டோ டிரைவர் பரிதாப பலி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஆட்டோ டிரைவர் பரிதாப பலி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஆட்டோ டிரைவர் பரிதாப பலி
ADDED : செப் 20, 2024 01:50 AM

சிவகாசி,:சிவகாசி, அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 55. இவருக்கு, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலை உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் உரிமம் பெற்ற இங்கு, 50 அறைகள் உள்ளன. 50 பேர் வரை பணிபுரிகின்றனர். நேற்று காலை பட்டாசு உற்பத்தி பணி நடைபெற்று கொண்டிருந்தது.
சிவகாசி, மீனம்பட்டியைச் சேர்ந்த குருமூர்த்தி, 19, ஒரு அறையில் வெடி மருந்துகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராமல் மருந்து கீழே விழுந்ததில், வெடி விபத்து ஏற்பட்டது.
அப்போது, பட்டாசு தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளை ஆட்டோவில் ஏற்றி வந்த, அம்மையார்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ், 26, விபத்து நடந்த அறை அருகே இறக்கி வைத்த போது, வெடி விபத்தில் சிக்கி இறந்தார்; குருமூர்த்தி காயமடைந்தார்.
விபத்து நடந்தது ஆலையின் முதல் அறை என்பதால், வெடிச்சத்தம் கேட்டவுடன் மற்ற அறைகளிலிருந்த தொழிலாளர்கள் உடனடியாக தப்பினர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆலை உரிமையாளர் பாலமுருகன், போர்மேன் கபில்ராஜ் மீது வழக்குபதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார், கபில்ராஜை கைது செய்தனர்; பாலமுருகனை தேடுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில், ஐந்து மாதங்களில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளில், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, செவல்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் நேற்று காலை நடந்த வெடி விபத்து குறித்து அறிந்த முதல்வர் ஸ்டாலின், விபத்தில் இறந்த கோவிந்தராஜ் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய், சிகிச்சை பெறும் குருமூர்த்திக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.