/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 27, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகே விருதுநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே மினி பஸ்களை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகாசியில் மினி பஸ்கள் அரசு கொடுக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்குவதில்லை.
இது சம்பந்தமாக பலமுறை கலெக்டர், சிவகாசி ஆர்டிஓ அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க விடவில்லை.
இதனால் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே இதனைக் கண்டித்து சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகே மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மகேந்திர குமார் தலைமை வகித்தார்.

