/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
108 ஆம்புலன்ஸ்களில் தானியங்கி பணி நிர்ணயிக்கும் நடைமுறை
/
108 ஆம்புலன்ஸ்களில் தானியங்கி பணி நிர்ணயிக்கும் நடைமுறை
108 ஆம்புலன்ஸ்களில் தானியங்கி பணி நிர்ணயிக்கும் நடைமுறை
108 ஆம்புலன்ஸ்களில் தானியங்கி பணி நிர்ணயிக்கும் நடைமுறை
ADDED : அக் 13, 2025 05:51 AM
விருதுநகர் : 108 ஆம்புலன்சுகளில் ஆட்டோமெட்டிக் அசைன்மென்ட் எனப்படும் தானியங்கி பணி நிர்ணயிக்கும் நடைமுறை அறிமுகமாகி உள்ளது. மாவட்டத்தில் குழந்தைகள் நல ஆம்புலன்ஸ் 2, வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் 8, அடிப்படை ஆம்புலன்ஸ்கள் 15 என 25 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளது.
விபத்து, மருத்துவ அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ்களை அலைபேசியில் தொடர்பு கொண்டால் சென்னை கட்டுப்பாட்டு அமையத்திற்கு சென்று, அங்கிருந்து அந்த மாவட்டத்தில் விபத்து நடந்த பகுதிக்கு அருகே உள்ள ஆம்புலன்ஸ் தொடர்பு கொள்வர். அதன் பின் ஆம்புலன்ஸ் தேவை உள்ள இடத்திற்கு சென்று மருத்துவ உதவிகளை வழங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்.
இந்த நடைமுறையால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கி, மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்வதில் சிரமம் இருந்தது. இதை போக்க 108 ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்டோமெட்டிக் அசைன்மென்ட்' எனும் தானியங்கி பணி நிர்ணயிக்கும் புதிய நடைமுறை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் ஒரு தனி அலைபேசி கொடுக்கப்பட்டு செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஜி.பி.எஸ்., வாகனத்தின் பராமரிப்பு, தேவையான மருந்துகள், மாத்திரைகள் கையிருப்பு விவரங்களை பார்க்கலாம்.
ஆம்புலன்ஸ்சிற்கு தொடர்பு கொண்டால் டவர் சிக்னலை வைத்து எங்கிருந்து தொடர்பு கொள்கின்றனர், மருத்துவ தேவை விவரங்கள் நேரடியாக ஆம்புலன்ஸ் அலைபேசியில் தோன்றிவிடும். அழைப்பு வந்தவுடன் அலாரம் எழுப்பி வாகனம் நகர்ந்தால் மட்டுமே அலாரம் நிற்கும்.
இதனால் 2 முதல் 5 கி.மீ., சுற்றளவுக்குள் இருக்கும் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக விபத்து, மருத்துவ தேவை உள்ள இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்கள், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிகிறது.