நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: அருப்புக்கோட்டை நோபிள் கல்லுாரியில் ரெட் ரிப்பன் கிளப், இன்டர்னல் கம்ப்ளைன்ட் செல் இணைந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாணவி நிலோபர் நிஷா வரவேற்றார். முதல்வர் வேல்மணி வாழ்த்தினார். டாக்டர் தீபா, மாணவர்களின் மனம், உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மாணவி நித்யஸ்ரீ நன்றிக்கூறினார்.

