/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம்
/
பெண்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : அக் 06, 2024 06:06 AM
காரியாபட்டி : காரியாபட்டி ஏ.நெடுங்குளம் பகுதியில் பணியாற்றிய 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் எஸ்.ஐ., கள், அசோக் குமார், சமீளா பேகம், கான்ஸ்டபிள் சுப்புலட்சுமி சென்று பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போலீசாரை உதவிக்கு அழைக்க, புகார் அளிக்க, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, போலீசாரின் தொடர்பு எண்கள், போலீஸ் தொடர்பான தகவல்கள் பெற காவலன் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100 நாள் பணியாளர்களின் ஆண்ட்ராய்டு அலைபேசியில் காவலன் உதவி செயலி பதிவிறக்கம் செய்து காண்பித்தனர். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எண்களை பதிவு செய்வது, பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.