ADDED : டிச 09, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் மத்திய சமையல் காஸ் சிலிண்டர் நிறுவனத்தின் சார்பில் எங்கள் சமையலறை எங்கள் பொறுப்பு என்ற தலைப்பில் காஸ் சிலிண்டர் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கான சிறந்த சமையல் கலைஞர்களுக்கான போட்டி நடந்தது.
இப்போட்டியில் சிவகாசி, சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் கலந்து கொண்டு பாரம்பரிய உணவுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமைத்து தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்தினர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த இல்லத்தரசிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து காஸ் சிலிண்டர் பாதுகாப்பாக பயன்படுத்துவது, விபத்து ஏற்படுவதை தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.