ADDED : அக் 10, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்தூரில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் தீபாவளியை முன்னிட்டு ஸ்வீட் காரம் தயாரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமை வகித்தார்.தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்.விதிமுறைகளைப் பின்பற்றி உணவு பொருள் தயாரிக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தர்மர், அம்ஜத் , இப்ராஹிம் கான், வீரமுத்து, ரகுநாதன், ஜோதிபாசு, மற்றும் ஸ்வீட் காரம் தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.