/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு
/
குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு
ADDED : அக் 10, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் சமூகநலத்துறை சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் பெண் குந்தைகளை காப்போம்,
அவர்களுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாட்டுப்புற கலைக் குழுவினரின் நாடகம், பாடல் வழியே, பெண் குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் குறித்தும், மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச எண்கள் 1098, 181 ஆகியவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டன. மாவட்ட சமூக நல அலுவலர் திலகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.