ADDED : அக் 10, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் அருகே பாப்பாக்குடி ஊராட்சியில் பயன்பாடு இல்லாத பழமையான கிணற்றுக்குள் நேற்று இரவு காட்டு மான் ஒன்று தவறி விழுந்து பலியானது.
நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் இறந்த மானை மீட்டு ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். கால்நடை மருத்துவர் மானை பிரேத பரிசோதனை செய்தனர். மான் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டது.