ADDED : நவ 01, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவுத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மாணவி சொர்ண ஸ்வாதி வரவேற்றார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் சரவண கணேஷ், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் பாண்டிசெல்வன், திட்ட மேலாளர் மார்ட்டின் கலந்துக் கொண்டனர். கல்லுாரியின் முதல்வர், சி.இ.ஒ., தர்மராஜ் கலந்துக் கொண்டனர்.
மாணவர்கள் தொழில் துவங்க தேவையான வழிமுறைகள், திட்டங்கள், தொழில் முனைவோர் மேம்பாட்டு படிப்பு பற்றி கூறினர். மாணவி தேன்மொழி நன்றி கூறினார்.

