ADDED : நவ 01, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: தாட்கோ சார்பில் எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்துதல் பயிற்சிகள் வழங்கப் படவுள்ளன.
இப்பயிற்சியின் போது 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை படித்திருக்க வேண்டும். 35 வயதிற்குள்ளும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள். திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். www.tahdco.com என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும், என்றார்.

