ADDED : நவ 16, 2026 12:31 AM
அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே கல்லூரணி, முத்துராமலிங்கபுரம், எம்.ரெட்டியபட்டி, பரளச்சி, மேலையூர் உள்ளிட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. எம்.ரெட்டியபட்டி அரசு பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு திருச்சுழி டி.எஸ்.பி., பிரதீப் தலைமை வகித்தார்.
போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலம், மனநலம் பாதிக்கப்படுவதுடன் மாணவர்களின் கல்வி, எதிர்காலம், அவர்களின் குடும்ப வாழ்க்கையும் பாதிப்பு அடையும், சமூகத்தில் பல்வேறு குற்ற செயல்கள் ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
மாணவர்கள் இதன் மீது ஆர்வம் கொள்ளாமல், கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும். தவறான தூண்டுதலுகளுக்கு ஆளாகாமல் போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.
இதையடுத்து மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
