ADDED : நவ 16, 2026 12:31 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் போதை வேண்டாம் வாழ்க்கை வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.என்., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள், கஞ்சா ஒழிப்போம் எதிர்காலம் காப்போம், மதுவும் கஞ்சாவும் நாட்டின் எதிரி அதை ஒழிப்பது இளைஞரின் புத்திமதி உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். பள்ளியில் துவங்கிய ஊர்வலம் பஜார் பகுதி, ரத வீதிகளை சுற்றி மீண்டும் பள்ளியில் முடிந்தது. இதேபோல் சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மீனம்பட்டி பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
