ADDED : நவ 19, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போதை பொருள் குறித்த ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில், போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 5 போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்குட்பட்ட பகுதிகளில் போதை பொருள் குறித்தும் அவற்றின் பயன்பாடு தடுப்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. '
திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி., கௌதம் கோயல் தலைமை வகித்தார். மக்களுக்கு போதைப் பொருட்கள் தடுப்பு குறித்தும் அதனால் ஏற்படும் விளைவு குறித்தும் விளக்கம் அளித்தார்.
