UPDATED : நவ 19, 2026 04:24 PM
ADDED : நவ 19, 2026 04:22 PM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் புத்தக கண்காட்சி நடந்தது.
பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் தலைமை வகித்தார். பொருளாளர் பால்சாமி முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். தாளாளர் விஜயகுமார் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் அவசியம் குறித்து பேசினார். அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து அறிவொளி முருகன் பேசினார், இதில் 228 மாணவர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகளுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் முத்துவேல், முத்துக்குமார், கருணாகரன், பள்ளி துணைத் தலைவர் ஆரியன் மதுரம், இணை செயலாளர் கூடலிங்கம், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்
