தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நுால் கொள்முதல் முறைகேடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நுால் கொள்முதல் முறைகேடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நுால் கொள்முதல் முறைகேடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 19, 2026 04:24 PM

ADDED : நவ 19, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 04:24 PM ADDED : நவ 19, 2026 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் முன்பு பெரியார் அறிவுலக நுாலக நுால் கொள்முதல் முறைகேட்டை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். துணை செயலாளர் ஜெகன் வரவேற்றார். சிவகாசி புறநகர் கிளை செயலாளர் முத்துராஜ், மாவட்ட துணை செயலாளர் பெரியநாயகம் முன்னிலை வகித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற் செயலாளர் முத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் நந்தன் கனகராஜ், மாநில துணை செயலாளர் மணிமாறன் பேசினர். தமிழகத்தில் அறிவுசார் பண்பாட்டை அழிக்க முற்பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டும், போலி புத்தக ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பாசனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில குழு உறுப்பினர் சசி ரேகா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us