ADDED : ஜூலை 17, 2025 12:18 AM
திருச்சுழி:திருச்சுழிஅருகே தமிழ்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சார்பாக பெண் குழந்தைகளை காப்போம் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் தென்றல் தலைமை வகித்தார். எஸ்.எஸ்.ஐ.,முத்துலட்சுமி, 181 சென்டர் பெண் அலுவலர் வைரமுத்து முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் மாணவிகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள், அதற்கான காரணங்கள், தடுப்பதற்கான வழிமுறைகள், குழந்தை திருமணங்கள் மற்றும் சட்ட உதவிகள் குறித்து மாணவிகளுக்கு போலீசார் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெண்களுக்கான அவசர உதவி அழைப்பு எண்கள் 1930, 14567, 14417, 181, 1098 மற்றும் போக்சோ சட்டம்,குழந்தைகள் திருமண சட்டம் குறித்து விளக்கப்பட்டது. காவலன் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து அதன் பயன்பாடுகள் பற்றி மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.