ADDED : ஜன 26, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துாரில் 15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாசில்தார் பாலமுருகன் தலைமை வகித்தார்.
நகராட்சி கமிஷனர் பிச்சையா, வருவாய் ஆய்வாளர் மலர் பாண்டியன், குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஆண்டாள் கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதேபோல் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்து மஞ்சள் பைகள் பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலமும் நடந்தது.