ADDED : ஜன 29, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரி, கப்பலுார் சுங்கச்சாவடி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட இயக்குனர் கீர்த்தி பரத்வாஜ், மதுரை குடியுரிமை பொறியாளர் விஜய் ஆனந்த், திட்டத் தலைவர் அப்பத்தி சீனிவாச கிரண் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்றனர். கப்பலுார் சுங்கச்சாவடி முதுநிலை மேலாளர் அசோக்குமார், சாலை பாதுகாப்பு மேலாளர் பாண்டியன், சுங்க கட்டண மேலாளர் மோணிகண்டன், மாவட்ட சாலை பாதுகாப்பு உறுப்பினர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

