ADDED : பிப் 03, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் 36வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு டூவீலரில் ஹெல்மட், காரில் சீட் பெல்ட் அணிதல் குறித்த விழிப்புணர்வை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள், ஹெல்மட் அணியாமல் வந்தவர்களுக்கு ஹெல்மட் வழங்கினார். இதில் போலீசார், போக்குவரத்து துறை அலுவலர்கள், மக்கள் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.

