ADDED : பிப் 05, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
முதல்வர் சுந்தர மகாலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, பொருளாளர் முனியாண்டி, செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
லயன்ஸ் சங்க தலைவர் ஸ்ரீ ரெங்கராஜா ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.