
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை பேரணியை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இந்த பேரணி விருதுநகர் தேசபந்து மைதானத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் கண்ணகி, துணை இயக்குநர்கள் யசோதாமணி, கலுசிவலிங்கம், யமுனா, விமலா, விருதுநகர் நகராட்சி கமிஷனர் லீனாசைமன், தாசில்தார் பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் வே.வ.வன்னியப்பெருமாள் செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.